போலி முதலீட்டு நிறுவனங்களின் நெட்வொர்க்கினை ஐதராபாத் சைபர் கிரைம் காவல்துறை கண்டறிந்துள்ளது.
மொபைல் செயலிகள் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றி ரூ.903 கோடி மதிப்பிற்கு பெரிய அளவில் பண முதலீட்டு மோசடி செய்துள்ளனர். இதில் கம்போடியா, துபாய் மற்றும் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு தொடர்பு உள்ளது. இதில் தொடர்புடைய 2 சீனர்கள் உள்பட 10 பேரை சைபர் கிரைம் காவல்துறை கைது செய்துள்ளது.