Wednesday, May 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுரஜினிக்கு எச்சரிக்கை விடுக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கை

ரஜினிக்கு எச்சரிக்கை விடுக்கும் அருணா ஜெகதீசன் அறிக்கை

அருணா ஜெகதீசன் அருக்கையில் ஸ்டெர்லைட் கலவரத்தின்போது நடிகர் ரஜினிகாந்த் ஊடகங்களிடம் பேசியது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு அறிவுரையும் கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரத்தின்போது சென்னையில் தன் இல்லத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “அரசு இயந்திரம் தோற்று விட்டது” என்றும் “காவல்துறை வரம்புமீறி தாக்குதல் நடத்தியுள்ளது” என்றும் பேசினார்.

பின்னர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, “போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் நுழைந்து காவலர்களைத் தாக்கி மாவட்ட ஆட்சியரகத்தை சேதப்படுத்தியதோடு ஸ்டெர்லைட் ஊழியர்களின் குடியிருப்புக்கும் தீவைத்துள்ளனர்” என்று பேசினார்.

இந்த கருத்துகளை ஆணையம் கவனத்தில் எடுத்துக் கொண்டது. இது தொடர்பாக அவரிடம் விளக்கமும் கேட்டது நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்.

அதே சமயத்தில், தூத்துக்குடி சென்றிருந்த ரஜினிகாந்த், “எதற்கெடுத்தாலும் போராடினால், தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும்” எனவும் கூறியிருந்தார்.

ரஜினியின் கருத்து குறித்து ஆணையம், “உறுதி செய்யப்படாத செய்திகளை பிடிவாதமாக நம்பும் தனிநபர்கள் பொதுவெளியை தவிர்க்க வேண்டும்,” என்று கூறியுள்ளது.

பிரபல நடிகர் ரஜினிகாந்த் அந்த சமயத்தில் உடனடியாக எதிர்வினை ஆற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படவில்லை. பொதுமக்கள் எளிதில் நம்பி விடக்கூடிய வாய்ப்புள்ள இதுபோன்ற தருணங்களில், ஒரு தகவலை பேசும் முன்பு அதன் மூலத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற வார்த்தைகளை பேசும் முன் தனக்கு வந்த தகவலை மிகவும் கவனமாக உறுதி செய்திருக்க வேண்டும். இதுபோன்ற உறுதி செய்யப்படாத தகவல்களை பிரபலங்கள் பேசுவதன் மூலம் அவர்களால் தீர்க்க முடிவதை விடக் கூடுதலான பிரச்னைகள் உருவாகி விடும்.

பிரபலங்கள் கட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும். இப்படி ‘உறுதி செய்யப்படாத தகவல்களை பிடிவாதமாக நம்பும்’ தனிநபர்களுக்கு பொதுவெளியில் இடம் கிடையாது. அவர்களே, சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட நட்சத்திரங்களாக இருக்கும்பட்சத்தில் மிக மிக கவனமாக பொதுவெளிக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளது.

- Advertisment -

Most Popular

Recent Comments