Thursday, December 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஉலகம்போப் பிரான்சிஸ் கருத்துக்கு எதிர்ப்பு - ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்டது வாடிகன்

போப் பிரான்சிஸ் கருத்துக்கு எதிர்ப்பு – ரஷ்யாவிடம் மன்னிப்பு கேட்டது வாடிகன்

வாடிகன்

உக்ரைன் போரில் சிறுபான்மையினர் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை போப் பிரான்சிஸ் சமீபத்தில் கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் போப்பின் இந்த கருத்துக்கு வாடிகன் மன்னிப்பு கேட்டுள்ளது.

கடந்த நவம்பர் நடந்த நேர்காணல் ஒன்றில் போப் பிரான்சிஸ் ரஷ்யா – உக்ரைன் போர் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும்போது, “ரஷ்ய வீரர்கள் சிறுபான்மையினர், உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். இவ்வாறு தாக்குதல் நடத்தும் வீரர்கள் எல்லாம் நிச்சயம் ரஷ்யாவின் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் அல்ல.. மாறாக இவர்கள் எல்லாம் அங்கு உள்ள செச்சென்ஸ், புரியாட்ஸ் போன்ற இனத்தைச் சேர்ந்தவர்கள்” என்று தெரிவித்திருந்தார்.

போப்பின் கருத்திற்கு ரஷ்யா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தற்போது வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வாட்டிகனின் செய்தி தொடர்பாளர் புரூனி வெளியிட்ட அறிவிப்பில், “நவம்பர் மாதம் நேர்காணல் ஒன்றில் போப் பிரான்சிஸ் பேசும்போது உக்ரைனில் சிறுபான்மையினர் மீதும் மக்கள் மீதும் ரஷ்ய வீரர்கள் நடத்திய தாக்குதலை விமர்சித்தார். இதற்காக தற்போது வாடிகன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ், “கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துமஸ் செலவுகளை குறைத்து உக்ரைன் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போர்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர். போர் காரணமாக உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்யாவால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

Recent Comments