இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தால், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது குறித்து தகவல் அளித்த ஒன்றிய அரசு, “அந்த இருமல் மருந்து நிறுவனத்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. நொய்டாவில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்திடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது” என தெரிவித்துள்ளது.