அதிமுக பொதுக்குழு வழக்கில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கில், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் சிக்கலை ஏற்படுத்தும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 20ம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.