Thursday, June 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்ராகுல்காந்தி தகுதி நீக்கம் - கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ பந்தம் ஏந்தி பேரணி

ராகுல்காந்தி தகுதி நீக்கம் – கன்னியாகுமரி மாவட்டத்தில் தீ பந்தம் ஏந்தி பேரணி

ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யபட்டதை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட தேசிய நெடுஞ்சாலையான முளகுமூடு பகுதியில் இளைஞர் காங்கிரசார் தீ பந்தம் ஏந்தி பேரணி, நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உட்பட ஐநூறு க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வயநாடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான ராகுல்காந்தியை மாநிலங்களவையில் தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் தொடர் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இளைஞர் காங்கிரசார் சார்பில் முளகுமூடு பகுதியில் இருந்து அழகியமண்டபம் வரையிலான சுமார் ஒரு கி.மீ தூரம் இளைஞர் காங்கிரசார் தீ பந்தம் ஏந்தி பேரணியாக வந்தனர்.

இந்த போராட்டத்திற்கு முன்னதாக முளகுமூடு சந்திப்பில் உள்ள ராஜிவ்காந்தி சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பேரணியை துவங்கி வைத்தார். இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு பங்கேற்றனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments