மகாராஷ்டிரா, நவி மும்பையில் பூஷண் விருது வழங்கும் விழா நேற்று (ஏப்.16) நடந்தது. திறந்த வெளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.
அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு விருது வழங்கினார். வெயிலின் தாக்கத்தால் அங்குக் கூடியிருந்தோர் பலரும் சுருண்டு விழுந்தனர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.