அமைச்சர் உதயநிதி தலைக்கு அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் 10 கோடி அறிவித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற சனாதனத்தை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.
தேசிய அரசியலில் இது பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பாஜகவை சேர்ந்த தலைவர்கள் பலரும் இதற்கு கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி இழிவாக பேசியதாக காரணம் காட்டி அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் கோபமடைந்துள்ளார்.
உத்திரபிரதேச மாநில அயோத்தியை சேர்ந்த பரமஹன்ஸ ஆச்சார்யா என்பவரை உதயநிதி படத்தை வாளால் தீயிட்டு கொளுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோடு நில்லாமல் அவர், தொடர்ந்து உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாய் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.