10 ஆண்டுகளுக்கு டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து போக்குவரத்து துறை உத்தரவு
06.10.2023 முதல் 05.10.2033 வரை 10 ஆண்டுகளுக்கு காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து
சமீபத்தில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் அதிவேகமாக ஓட்டி டி.டி.எஃப். வாசன் விபத்தில் சிக்கினார்
பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் உரிமங்களும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை
டி.டி.எஃப். வாசன் போல பிற இளந்தலைமுறையினரும் ஆகிவிடக்கூடாது என்பதால் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்ய காரணம் கேட்கும் குறிப்பாணை வழங்கப்பட்டது.