Sunday, April 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeகட்டுரைபிராய்லர் கோழி இறைச்சியின் தீமைகள்

பிராய்லர் கோழி இறைச்சியின் தீமைகள்

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி. வளர 12 விதமான கெமிக்கல்கள், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது. ஆண்மையை அழிக்கும் பிராய்லர் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம். பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழிதான் காரணம்.

டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ்-எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசி மூலம் போடுகிறார்கள். இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது.

பிராய்லர் கோழி சதையில் கொலஸ்ட்ரால் அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

100 -ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம். தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர், குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது. மஞ்சள் காமாலை , இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .

- Advertisment -

Most Popular

Recent Comments