புதுடில்லி
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து மார்ச் 26-ம் தேதி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.
டில்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று இரவு அவரது வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தி கைது செய்து தங்கள் காவலில் வைத்துள்ளது அமலாக்கத்துறை.
இன்று டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை நீட்டிக்க கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு நீதிபதி முன் விசாரணையில் உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக கெஜ்ரிவால் கைதுக்கு “இண்டியா கூட்டணி” தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கெஜ்ரிவால் கைதை கண்டித்து வரும் 26-ம் தேதி பிரமதர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது எனவும் நாடு முழுதும் ஆம் ஆத்மி கட்சியினர் பங்கேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.