Saturday, April 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு "மைக்"  சின்னம் ஒதுக்கீடு

சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு “மைக்”  சின்னம் ஒதுக்கீடு

நாம் தமிழர் கட்சி கடந்த முறை போட்டியிட்ட  கரும்பு விவசாயி சின்னம்  கைநழுவி சென்றுவிட்ட நிலையில் அந்த கட்சிக்கு  தற்போது மைக் எனப்படும் ஒலி வாங்கி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.

கடந்த 4 தேர்தல்களாக தமிழ்நாட்டில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கட்சி கடந்த தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டடது.

அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு பொதுவான சின்னங்களை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாய அமைப்புக்கு கரும்பு விவசாயி சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டது.

கரும்பு விவசாயி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வலியுறுத்தி சீமான் தரப்பினர் டெல்லி உயர்நீதிமன்றத்தையும் நாடி இருந்தனர். உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது . இந்த சூழலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஒலி வாங்கி எனப்படும் மைக் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ளது.

40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த சீமான், சரிபாதி அளவில் பெண் வேட்பாளர்களையும் நிறுத்தினார். அவர்களுக்கு எந்த சின்னத்தில் வாக்கு கேட்பது என்ற சிக்கல் நிலவி வந்த நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் சங்கு, மைக் உள்ளிட்ட சின்னங்கள் கோரப்பட்டது.

இவற்றில் தற்போது மைக் சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 40 வேட்பாளர்கள் மற்றும் சின்னம் அறிமுக  கூட்டத்தையும் சீமான் விரைவில் நடத்த இருக்கிறார்.  ஒலி வாங்கி சின்னம் கிடைத்துள்ள நிலையில் பதாகைகள், துண்டு பிரசுரங்களை அச்சிட்டு அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணிகளில் நாம்தமிழர் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisment -

Most Popular

Recent Comments