நேற்று பெங்களூரில் பேசிய ப்ரியங்கா காந்தி, உங்கள் தங்கத்தை, உங்கள் தாலியை காங்கிரஸ் பறிக்க விரும்புகிறது என்று மோடி கூறுகிறார். நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. காங்கிரஸ் 55 ஆண்டுகள் ஆட்சி செய்தது. உங்கள் தங்கத்தையோ உங்கள் தாலியையோ யாராவது கொள்ளையடித்திருக்கிறார்களா?
400 இடங்களை கடந்து வெல்வோம்.. 400ஐ கடந்து அரசியலமைப்பை மாற்றுவோம் என்று பிரதமர் கூறுகிறார். சில சமயங்களில் அவரை நாங்கள் அசிங்கமாக பேசுவதாக மோடி கூறுகிறார், அல்லது மதம் பற்றி பேசுகிறார். அவர் என்றாவது மக்கள் பிரச்சனைகளை பற்றி பேசி உள்ளாரா? காங்கிரஸ் கட்சி பெண்களின் தங்கம், தாலியை பறிக்கும் என தேர்தலுக்காக பிரதமர் மோடி பேசி வருகிறார்.
போராட்டத்தின்போது உயிரிழந்த 600 விவசாயிகளின் மனைவிகளுடைய தாலி குறித்து பிரதமர் கவலைப்பட்டாரா? மணிப்பூரில் ஆடையின்றி பெண்கள் இழுத்துச் செல்லபட்ட போது, அவர்களின் தாலி குறித்துதான் கவலைப்பட்டாரா? காங்கிரஸ் கட்சி 55 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது யாரேனும் உங்கள் தங்கத்தை, தாலியை பறித்தார்களா? என்னுடைய பாட்டி இந்திரா காந்தி, போரின்போது இந்த நாட்டுக்காக தனது தங்கத்தை கொடுத்தார். எனது தாயார் நாட்டுக்காக தாலியை தியாகம் செய்தார், என்று ப்ரியங்கா காந்தி பேசி உள்ளார்.