Tuesday, July 1, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுIPL 2025: எங்களுக்கு சாதகமாக பல முடிவுகள் நடந்தது -  மும்பை கேப்டன் ஹர்திக்

IPL 2025: எங்களுக்கு சாதகமாக பல முடிவுகள் நடந்தது –  மும்பை கேப்டன் ஹர்திக்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் மிகவும் முக்கிய லீக் ஆட்டமான மும்பை, பஞ்சாப் அணிகள் மோதும் 69 ஆவது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அந்த அணி முதல் குவாலிஃபையர் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.

 இதனால் இந்த போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சூழலில் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நான் என்னுடைய பேச்சை விட செயலில் காட்ட விரும்புகின்றேன். எங்கள் அணி வீரர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இன்றைய அணியில் நியூசிலாந்து வீரர் கெயில் ஜெமிசன் மற்றும் வைசாக் ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். இரண்டு அணிக்குமே பல சூழல் சாதகமாக இருக்கும்.

ஏனென்றால் காற்று நன்றாக அடிக்கிறது. இன்னொரு ஒரு நாள் குறித்து எதிர்பார்க்காமல் முடிவை இன்றே எட்டி விட வேண்டும் என நினைக்கின்றேன். நாங்கள் அனைவரும் எங்களுடைய விளையாட்டுத் திறனை அதிகப்படுத்த வேண்டும். அழுத்தத்தில் சிறப்பாக செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரேயாஸ் தெரிவித்துள்ளார்.

 இதனை தொடர்ந்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, ஆடுகளம் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். இந்த ஆடுகளத்தில் டாசை இழந்தது நல்லது என்று நினைக்கின்றேன். ஏனென்றால் டாஸ் ஒருவேளை வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எனக்கு தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை.

இதனால் முதலில் பேட்டிங் செய்யவோ பந்து வீசவோ எனக்கு எந்த கவலையும் இல்லை. கடந்த சில நாட்களாக எங்களுக்கு சாதகமான முடிவுகள் அமைந்து இருக்கிறது. இது எங்களுடைய உத்வேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ஐந்து நாட்களுக்கு முன்பு நாங்கள் முதலிடத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் இல்லை.

ஆனால் இன்று வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடத்திற்கு செல்வோம். கடந்த எட்டு ஒன்பது போட்டிகளாக எங்களுக்கு அனைத்து போட்டியுமே நாக்அவுட் போட்டியாக தான் இருந்தது. இன்று எங்கள் அணியில் அஸ்வினி களத்திற்கு திரும்புகிறார் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார் .

- Advertisment -

Most Popular

Recent Comments