அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸில் 9 ஏக்கர் பரப்பளவில் வார்னர் எஸ்டேட் மாளிகை அமைந்துள்ளது. கடந்த 1930ம் ஆண்டுகளில் ஹாலிவுட் திரைப்படம் ஒன்றுக்காக அந்த மாளிகை வடிவமைக்கப்பட்டது.
அக்கட்டிடத்தை ஜெப் பெஜோஸ் தற்போது 1,178 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். அமேசான் நிறுவனத்திலுள்ள தனது பங்குகளை விற்று 29,300 கோடி ரூபாயை பெஜோஸ் அண்மையில் திரட்டியிருந்தார். அந்த பணத்தின் சிறு பகுதியை கொண்டு, பெவர்லி ஹில்ஸ் மாளிகையை பெஜோஸ் வாங்கியுள்ளார்.
சிடாடெல் நிறுவனர் கென் கிரிபின் ((Citadel founder Ken Griffin)) நியூயார்க்கில் 1,699 கோடி ரூபாய்க்கு மாளிகை வாங்கியிருந்தார். அதற்கடுத்ததாக மிக அதிக விலைக்கு வாங்கப்பட்ட மாளிகையாக இது கருதப்படுகிறது.



