கடந்த 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் மற்றும் பிரசன்ன நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் துப்பறிவாளன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு லண்டனில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து மிஷ்கின் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று ஒரு தகவல் வெளியானது.
அதன் பிறகு, விஷால் தயாரித்து நடித்து வந்த இந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகமானதால் மிஷ்கின் படத்திலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாகத் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. . எஞ்சியுள்ள திரைப்படத்தை நடிகர் விஷாலே இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகின, இந்நிலையில் இந்த படத்தின் First Look வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுநடிகர் விஷாலின் விஷால் பிலிம் பாக்டரிக்கு இயக்குநர் மிஷ்கின் ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில் 15நிபந்தனைகளையும் அவர் வைத்துள்ளார்.
1. தனக்கு சம்பளமாக ஜி.எஸ்.டி வரியை சேர்த்து சுமார் 5 கோடி தரவேண்டும்.
2. லொகேஷன் எனப்படும் படத்திற்கான படப்பிடிப்பு இடங்களை முடிவு செய்யும் எல்லா உரிமையும் இயக்குநருக்கு தான் உண்டு மற்றவர்கள் யாரும் இதில் தலையிடக்கூடாது.
3. இயக்குநரிடம் தற்போது இந்தி ரீமேக் உரிமை மட்டுமே உள்ளது. ஆகவே இதில் தயாரிப்பாளருக்கு எந்தவித உரிமையும் இல்லை.
4. இந்த படத்தை குறித்த எல்லா தகவல்களும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே இருக்கும் என்பன உள்ளிட்ட 15 நிபந்தனைகளை அவர் வெளியிட்டுள்ளார்.