Sunday, January 5, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeசினிமாபாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொடுத்த மதன் கார்க்கி

பாகுபலியின் ‘கிளிகி’ மொழிக்கு உருவம் கொடுத்த மதன் கார்க்கி

புதிய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய பேருக்கு இருக்கும். புதிய மொழி ஒன்றை உருவாக்க முடியுமா என்றால், `சாத்தியமே இல்லை பாஸ்’ என்ற பதில்தான் வரும். ஆனால், முற்றிலும் புதிதாக ஒரு மொழியை உருவாக்கியிருக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.

பாகுபலி படத்தில் காளகேயர்கள் பயன்படுத்தும் `கிளிகி’ மொழியை இலக்கண விதிகளோடு முழுவதுமாக உருவாக்கியிருக்கிறார். ஹாலிவுட்ல இந்த மாதிரிப் படங்கள் அல்லது சீரிஸ்க்கென்றே தனியா மொழி உருவாக்கியிருக்காங்க. இந்தியாவில் பாகுபலியில்தான் முதன்முதலாக அப்படி ஒரு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. தற்போது அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் இருக்கிறார்கள் மதன் கார்க்கி அன்ட் கோ.

பாகுபலி படம் பண்றப்போ அந்தப் படத்துக்குத் தேவையான அளவுல 700 வார்த்தைகள், 40 இலக்கண விதிகள் மட்டும் உருவாக்கினேன். அந்தப் படத்தைப் பார்த்துட்டு நிறைய பேர் இந்த மொழிய கத்துத்தர முடியுமானு கேட்டாங்க. அதற்கப்புறம் தான் இந்த மொழி மேற்கொண்டு உருவாக்கலாமேனு யோசனை வந்துச்சு.

நிறைய மொழிகள் கத்துக்கிறதுக்குக் கடினமா இருக்கும். அப்படி கடினமான விஷயங்கள் நிறைய இருக்கும் போது, கத்துக்கிறத பாதியிலேயே கைவிடுறவங்களும் நிறைய பேர் இருப்பாங்க. அதுனால நாமே இருக்கிறதுலையே சுலபமான மொழிய உருவாக்கக் கூடாதுனு யோசனை பண்ணேன். அதுனால மற்ற மொழியில நாம எதை எல்லாம் கஷ்டம்னு நினைக்கிறேமோ அது எதுவும் இல்லாம கிளிக்கிய வடிவமைச்சேன்.

ஆங்கிலம் கத்துக்கணும்னா 52 ஸிம்பல் தெரியணும், ஒரே எழுத்துக்கு இடங்களைப் பொறுத்து ஒலி வடிவமும் மாறுபடும். தமிழ்னு எடுத்துக்கிட்டா 110 ஸிம்பல்ஸ் தெரியணும். கிளிக்கி கத்துக்க வெறும் 22 ஸிம்பல்ஸ் தெரிஞ்சா போதும். கிளிக்கிய முழுசா எழுத படிக்க முடியும்.

கிளிக்கிக்கென்று தனியாக எண் வடிவங்களும் உருவாக்கியிருக்கிறார்கள். கிளிக்கி எண்களைக் கற்றுக்கொள்ள 2 நிமிஷம் போதும், கிளிக்கி எழுத்துகளை முழுமையாகக் கற்றுக் கொண்டு எழுத ஒரு மணிநேரம் போதும் என தம்ஸ் அப் காட்டுகிறார். இதில் இருக்கின்ற இலக்கணங்களும் மிகவும் எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ளும்படிதான் வடிவமைத்திருக்கிறார்.

“எழுத படிக்கறது கஷ்டமா இருக்குனு சிலருக்கு இயல்புலேயே இருக்கும். அவங்களும் சுலபமா கத்துக்கிற மாதிரிதான் இதை வடிவமைச்சிருக்கேன். `உலகத்தோட ஈஸியான மொழி’ அப்படிங்கிறதுதான் கிளிக்கி மொழியோட அடிப்படை கான்செப்ட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments