Friday, May 3, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகொரோனா செய்திகள் 27-04-2020

கொரோனா செய்திகள் 27-04-2020

உலகம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,21,049 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,08, 527-ஆக அதிகரித்துள்ள நிலையில் 8,91,212 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

சென்னையில் காவலர்களுக்கு உணவு தேநீர் வழங்கி வந்த நபருக்கு கொரானா கண்டறியப்பட்டுள்ளது. நாள்தோறும் 200 பேருக்கு உதவி வந்த நபருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ராயப்பேட்டை  மற்றும் ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்த காவலர்களுக்கு அந்த நபர் உதவி வந்ததாக தகவல். காவலர்களை பரிசோதனை செய்ய முடிவு.

மதுரை உசிலம்பட்டியில் கொரானா  பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது. மதுரை மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தைக்கு கொரானா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மதுரை பெருங்குடியில் உள்ள போக்குவரத்து காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் தனிமைபடுத்தப்பட்டது. அவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட அவருடன் தொடர்புடைய 41 நபர்களுக்கு பரிசோதனை.

புதுச்சேரி கொரோனா அச்சுறுத்தலால் புதுச்சேரி காலாப்பட்டு சிறைச்சாலை தற்காலிகமாக அரசு கல்லூரிக்கு மாற்றம். தற்காலிக சிறையாக மாற்றப்படும் அரசு கல்லூரியில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மருத்துவக் குழு அமைப்பு.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் கொரோனா வைரஸ் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்ட பகுதிகளை திறக்க கோரி பொதுமக்கள் போராட்டம்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாருக்கு, திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் கபசுர குடிநீர், சூரணம் பொட்டலங்களை ஆட்சியர் விஜயலட்சுமி வழங்கினார்.

கொடைக்கானல் மலைப் பகுதிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களிலும் நவீன இயந்திரங்கள் மூலம் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக அரசு பெற்ற 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்களும் திரும்ப அனுப்பப்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள கொள்முதல் ஆணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. ரேபிட் கிட்கள் அனைத்தும் திரும்ப அனுப்பப்படுவதால் அரசுக்கு எந்த ஒரு செலவும் இல்லை. மத்திய அரசு அனுமதி அளித்த, மத்திய அரசு அளித்த அதே விலையில் தான் ரேபிட் டெஸ்ட் கிட் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது எனவும் கூறினார்.

கேரள மாநிலத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கேரளாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 482-ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு குறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் நாளை காலை 10 மணிக்கு முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.

கொரோனா பாதித்து செய்தியாளர் உயிரிழந்தால் ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

ஊரடங்கால் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்ட காலத்தை சிறப்பு விடுமுறையாக அறிவிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சிறப்பு விடுமுறை என்பது ஒரு நாள் மட்டுமே அறிவிக்க முடியும். ஊரடங்கை சிறப்பு விடுமுறையாக அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை முகப்பேர் பாடிக்குப்பம் பகுதியில் அடுத்தடுத்து 14 பேருக்கு கொரோனோ தொற்று நோய் ஏற்பட்டுள்ளதாக தகவல்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் 1 ஆண்டுகளுக்கு கிடைக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஆந்திராவை சேர்ந்த நபர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்த இடத்தில் கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை 3 இடங்களுக்கு மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சந்தையில் வியாபாரிகள் குவிவதை தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை.

கோயம்பேடு சந்தையை 3ஆக பிரிப்பது தொடர்பாக உறுப்பினர்களுடன் ஆலோசித்து பதிலளிக்க வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்.

ஊரடங்கில் விதிமீறல்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன; கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்துங்கள் – மாநில முதல்வர்களிடம் அமித்ஷா வலியுறுத்தல்.

உத்தரபிரதேசம் : ஆக்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. ஆக்ராவில் மட்டும் இதுவரை 381 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை மேலும் 1 மாதம் நீட்டிக்க ஒரிசா முதலமைச்சர்  பிரதமரிடம் வலியுறுத்தல்.

கொரோனா பாதிக்கப்படாத இடங்களில் தொழில்களை தொடங்க அனுமதிக்க கோரிக்கை. பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தியதாக தகவல்.

திருப்பூரில் “ஸ்மார்ட் காப்” செயலி மூலம் முழு ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் சுற்றிய 50 பேருக்கு தலா ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்டது.

புதுச்சேரியில் ஊரடங்கை மீறி திறக்கப்பட்ட 89 மதுக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி  பட்டியல் வெளியீடு. ராயபுரத்தில் அதிகபட்சமாக 145 பேர் பாதிப்பு.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,84,861 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை அளிபத்தற்கான அனுமதியை தமிழகத்திற்கு உடனடியாக வழங்கும் படி பிரதமரிடம் முதல்வர் வற்புறுத்தல்.

ரூ. 245 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட்கிட்டிற்கு, அதிமுக அரசு ரூ.600 ரூபாய் கொடுத்தது ஏன்? ICMRன் அங்கீகாரமில்லாத நிறுவனத்திற்கு கொள்முதல் ஆர்டரைக் கொடுத்தது ஏன்? – தி.மு.க தலைவர் ஸ்டாலின்

கொரோனா தொற்று ஏற்பட்டு முழு குணமடைந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்முறையாக தனது அலுவலகத்துக்கு வந்து பணியை தொடங்கினார்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் 284 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

கோயம்பேடு சந்தை மூலம்  2 பேருக்கு கொரோனா, மேலும் 4 பேருக்கு கொரோனா பரவினால் சந்தையை மூட வேண்டிவரும். ஊரடங்கு காலத்தில் ஒரு நாள் கூட கோயம்பேடு சந்தையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

விழுப்புரத்தில் 1 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் தண்டனைக் கைதிகளைத் தவிர்த்து, 89 விசாரணைக் கைதிகளை விடுவித்தது சிறைத்துறை.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா வெற்றி அடைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தெற்குவாசல் காவல்நிலையம் மூடப்பட்டது.

ஆந்திராவை சேர்ந்த நபர் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்த இடத்தில் கொரோனா இருப்பது கண்டுபிடிப்பு.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை 3 இடங்களுக்கு மாற்ற ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சந்தையில் வியாபாரிகள் குவிவதை தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை.

கோயம்பேடு சந்தையை 3ஆக பிரிப்பது தொடர்பாக உறுப்பினர்களுடன் ஆலோசித்து பதிலளிக்க வியாபாரிகள் சங்க பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்.

ஊரடங்கில் விதிமீறல்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன; கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்துங்கள் – மாநில முதல்வர்களிடம் அமித்ஷா வலியுறுத்தல்.

உத்தரபிரதேசம் : ஆக்ராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி. ஆக்ராவில் மட்டும் இதுவரை 381 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கை மேலும் 1 மாதம் நீட்டிக்க ஒரிசா முதலமைச்சர்  பிரதமரிடம் வலியுறுத்தல்.

நாளைமுதல் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும். 2 பேர் சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் – அமைச்சர் தங்கமணி.

கொரோனா பாதிக்கப்படாத இடங்களில் தொழில்களை தொடங்க அனுமதிக்க கோரிக்கை. பிரதமருடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற மாநில முதலமைச்சர்கள் வலியுறுத்தியதாக தகவல்.

புதுச்சேரியில் ஊரடங்கை மீற திறக்கப்பட்ட 89 மதுக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி  பட்டியல் வெளியீடு. ராயபுரத்தில் அதிகபட்சமாக 145 பேர் பாதிப்பு.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 2,84,861 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிளாஸ்மா சிகிச்சை அளிபத்தற்கான அனுமதியை தமிழகத்திற்கு உடனடியாக வழங்கும் படி பிரதமரிடம் முதல்வர் வற்புறுத்தல்.

ரூ. 245 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட்கிட்டிற்கு, அதிமுக அரசு ரூ.600 ரூபாய் கொடுத்தது ஏன்? ICMRன் அங்கீகாரமில்லாத நிறுவனத்திற்கு கொள்முதல் ஆர்டரைக் கொடுத்தது ஏன்? – தி.மு.க தலைவர் ஸ்டாலின்

கொரோனா தொற்று ஏற்பட்டு முழு குணமடைந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்முறையாக தனது அலுவலகத்துக்கு வந்து பணியை தொடங்கினார்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் 284 மாவட்டங்களில் ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை.

கோயம்பேடு சந்தை மூலம்  2 பேருக்கு கொரோனா, மேலும் 4 பேருக்கு கொரோனா பரவினால் சந்தையை மூட வேண்டிவரும். ஊரடங்கு காலத்தில் ஒரு நாள் கூட கோயம்பேடு சந்தையில் தனிமனித இடைவெளி கடைபிடிக்கவில்லை – காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்.

விழுப்புரத்தில் 1 வயது குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா வெற்றி அடைந்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமை காவலருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தெற்குவாசல் காவல்நிலையம் மூடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments