Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகொரோனா செய்திகள் 11-04-2020

கொரோனா செய்திகள் 11-04-2020

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,00,378-ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 1,02,687 பேர்  உயிரிழந்த நிலையில் 3,76,109 பேர் குணமடைந்துள்ளனர். 49,830 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,043 பேர் பலி, மொத்த பலி எண்ணிக்கை 18,725 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 33,752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,318 ஆக அதிகரித்தது.

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18,849 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,577 ஆக உயர்ந்துள்ளது.

ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,081 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,58,273 -ஆக அதிகரித்துள்ளது.

பிரிட்டனில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 980 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,958 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,758 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானில் கொரோனாவால் 4,232 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜெர்மனியில் 2,767 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பெல்ஜியத்தில் 3,019 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நெதர்லாந்தில் 2,511 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

துருக்கியில் 1,006 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் 1,002 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

பிரேசில் நாட்டில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 987 பேர் உயிரிழந்துள்ளனர். 1,068 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,197 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் புதிதாக 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மூன்று பேர்  உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 197. 54 பேர் குணமடைந்துள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

சோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் அதில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை சதவிகிதத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்.

குஜராத் மாநிலத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 432-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா  பாதிக்கப்பட்ட மாநிலங்களில் குஜராத் 7-வது இடத்தில் உள்ளது.

கொரோனாவுக்கு புதுச்சேரி மாநிலத்தில் முதல் பலி. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 71 வயது முதியவர் உயிரிழப்பு. மாஹே பகுதியை சேர்ந்தவர் உயிரிழந்ததாக, புதுச்சேரி சுகாதார துறை தகவல்.

கர்நாடகாவில் புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு. வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 214ஆக உயர்வு. வைரஸ் பாதித்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் குணமடைந்துள்ளனர்.

சென்னையில், 27 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர் பணியாற்றிய, மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட உள்ளதாக தகவல். மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என ஆய்வு செய்ய முடிவு.

கொரோனாவில் இருந்து மீள மேலும் 3 வாரம் ஊரடங்கு தேவை – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மக்கள் டிவி பார்ப்பதில் அதிக நேரம் செலவிடுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஊரடங்கு மீறல் சென்னையில் 40 ஆயிரம் வழக்குகள் பதிவு – தமிழகத்தில் கைது எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரமாக உயர்வு.

இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைக் குடும்பங்களுக்கும் அரசு தலா ரூ.5,000 வழங்க ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் மேலும் 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,666-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது.

கொரோனா ஊரடங்கு உத்தரவில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு விலக்கு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மீன்பிடி சார்ந்த விற்பனை செய்தல், பதப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து தொழில்களுக்கும் விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் 18 சமையல் எண்ணெய் ஆலைகள், 20 அரிசி ஆலைகள் செயல்பட தொடங்கின. 15 பிரட், பிஸ்கட், நிறுவனங்கள், 5 பருப்பு ஆலைகளும் செயல்பட தொடங்கியுள்ளன.

சென்னை முழுவதும் கூடுதலாக 10 கொரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட உள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியே வர வண்ண நிற அனுமதி சீட்டு வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும். – சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

கொரோனாவை விரைவாக கண்டறியும் “ரேபிட் டெஸ்ட்” கருவி இன்னும் இந்தியாவுக்கே  வரவில்லை. ரேபிட் டெஸ்ட் கருவிகள் வராததற்கான காரணங்கள் தெரியவில்லை – சென்னை மாநகராட்சி ஆணையர்.

சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 84 வயது மூதாட்டி மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த இருவரும் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

தனியார் மருத்துவமனையில் கொரானோ பரிசோதனையை இலவசமாக்க வேண்டும். கொரானோ நிவாரணமாக குறைந்தபட்சம் ₹5000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments