Wednesday, May 1, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுகொரோனா செய்திகள்

கொரோனா செய்திகள்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734. உயிரிழந்தோர் எண்ணிக்கை 149லிருந்து 166ஆக உயர்வு. குணமடைந்தோர் எண்ணிக்கை 411லிருந்து 473ஆக அதிகரிப்பு – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்.
 
வேலூரில் கொரானாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் புதிய நேரக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மளிகைக்கடைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் திங்கள், வியாழன் மற்றும் ஞயிற்று கிழமைகளில், வாரத்தில் 3 நாட்கள் மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை திறந்திருக்கும். அதேபோல், காய்கறி கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் ஆகியவை தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரையும் பால் விற்பனை காலை 6 மணி முதல் 8 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையும்  செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
 
உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 4.30 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளன.
 
உலகளவில் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த வைரஸ் தொற்றுக்கு 88,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாகவும் 3,29,000-க்கும் அதிகமானவர்கள் இந்த கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த அமலில் உள்ள ஊரடங்கை மீறி மக்கள் வெளியேறினால் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று எச்சரித்துள்ளது. கேரள அரசு இதனை ட்ரோன் மூலம் கண்காணித்து வருகிறது. இந்நிலையில், வயல்வெளிகள் மற்றும் கடற்கரைகளில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்தரவர்கள் மேலே ட்ரோனைக் கண்டதும் தங்கள் வீடுகளுக்கு ஓடும் வீடியோ ஒன்றை கேரள காவல்துறையினர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
 
டெல்லியில், கொரோனா வைரஸால் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள 20 பகுதிகளுக்கு சீல் வைத்துள்ளதாக அம்மாநிலத்தின் துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். மேலும், சீல் வைக்கப்பட்ட பகுதிகளுக்குள் யாரும் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வெளிநாடுகளில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் மரணமடையும் தகவல்கள் வருவதால் ஆன்லைன் மூலம் ஐந்து மருத்துவ உதவி மையங்கள் திறக்கப்படுகின்றன என்றும், இங்குள்ள டாக்டர்கள் வெளிநாட்டில் உள்ள மலையாளிகளுக்கு காணொளி காட்சிகள் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.  
 
சேலம் மாவட்டத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு ஒருமுறைதான் மளிகை பொருள்கள் மற்றும் காய்கறிகள் வாங்க மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகவும் அறிவித்துள்ளது.
 
கொரோனா வைரஸால் இத்தாலி கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றுக்கு 17,669 பேர் இறந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 542 பேர் பலியாகியுள்ளனர். 1,39,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.
 
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 5,734 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். இதில், 166 பேர் இறந்துள்ளனர். 473 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
 
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹூப்ளி பகுதியில் உள்ள மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்க அதிக அளவில் வீதிக்கு வருகின்றனர். இதனால், அதிகாரிகள் மக்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.
 
கேரளாவில், கக்கநாடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் மருத்துவர் ஒருவர் நுழைய பிற குடியிருப்பாளர்கள் அனுமதி மறுத்துள்ளனர். இதேபோல கடந்த சில நாள்களுக்கு முன்பு செவிலியர் ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதனை அறிந்த அதிகாரிகள் தொற்று நோய்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் மக்களுக்கு கடுமையாக எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.
 
விழுப்புரம் மாவட்டத்தில் 16 ஆக இருந்த கொரோனா பாதிப்பு மேலும் 4 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு 20 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மக்களிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
 
வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேர் சுற்றுலா விசா முடிந்து திண்டுக்கல் பேகம்பூரில் இருந்து மீட்டு திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை நடத்தப்படுகிறது.

 
இந்தியாவில் கொரோனாவுக்கு முதல்முறையாக மருத்துவர் உயிரிழப்பு. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் உயிரிழந்தார்.
 
“கொரோனா விவகாரத்தை அரசியல் ஆக்கினால் பிணக்குவியல்களை காண நேரிடும்”. உலக சுகாதார மையம், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மறைமுக எச்சரிக்கை. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார மையம் செயல்படுவதாக, டிரம்ப் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலடி.
 
ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு. கல்வி நிறுவனங்கள் ஜூன் 17ம் தேதி வரை மூடல். ஏப்ரல் 30ம் தேதி வரை ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையை தொடங்க வேண்டாம் என மத்திய அரசுக்கு முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்.
 
ஏப்ரல் – மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்தது அண்ணா பல்கலைக்கழகம். மே மாதம் நடைபெறும் பொறியியல் தேர்வுகளும் தள்ளிவைப்பு. கொரோனா தாக்கம் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை.
 
மனிதரிடம் இருந்து குரங்குகளுக்கு கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குரங்குகளுக்கு உணவு அளிக்க வேண்டாம் எனவும், காடுகளை ஒட்டிய பகுதிகளில் குரங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுவதாக தகவல் வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். 

 

கொரோனா தடுப்பு மற்றும் கண்காணிப்புக்கான, 12 ஒருங்கிணைப்பு குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தவும், கண்காணிக்கவும், அவசிய சேவைகள் தடைபடதா வண்ணம் விநியோகத்தை உறுதிப்படுத்தவும் 12 ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் 40 பேர் இந்த குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். 

 
கொரோனா தடுப்புச் செலவுக்காகப் புதுச்சேரியில் பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரி நாளை முதல் ஒரு விழுக்காடு உயர்த்தப்பகிறது. இந்த வரி உயர்வு நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்க பட்டுள்ளது.
 
வீட்டை விட்டு வெளியே வரும் போது முக கவசம் அணிவது கட்டாயம். முக கவசம் அணியாமல் வெளியே சுற்றித் திரிபவர்களுக்கு 1 மாதம் முதல் 6 மாதம் வரை சிறை. டெல்லி அரசு அறிவிப்பு.
 
குஜராத்தில் இருந்து கடந்த 9ம் தேதி சென்னைக்கு வந்து மத பிரச்சாரம் செய்த 39 மத குருமார்கள் பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள ஜமாத்தில் தங்கி மத பிரச்சாரம் செய்துள்ளனர். இதில் 80 வயதுடைய நபருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருடன் தங்கியிருந்த 39 பேரும் மருத்துவமனையில் அனுமதி.
 
2,500 வென்டிலேட்டர் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றிரவு 50 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வருகின்றன – முதலமைச்சர் பழனிசாமி.
 
தற்போது கொரனா வைரஸ் தாக்கத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. நோய் தொற்றின் நிலைமையை பொறுத்து தான் 144 தடை  உத்தரவு நீட்டிப்பு தொடர்பாக முடிவுகள்  எடுக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி.
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்பொழுது நீதிமன்றங்கள் செயல்படாமல் உள்ள நிலையில், அந்த பணிகளை சரிகட்ட இந்த ஆண்டிற்கான கோடை விடுமுறை ரத்து செய்யப்படுவதாக டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு.
 
மயிலாப்பூரில் பணியின் போது உயிரிழந்த காவலர் அருண்காந்த் குடும்பத்திற்கு ₹10 லட்சம் நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments