Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுசென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி திருமணம் நடத்திய பூசாரி கைது

சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி திருமணம் நடத்திய பூசாரி கைது

சென்னை பட்டாளத்தில் ஊரடங்கு விதிகளை மீறி நூற்றுக்கணக்கான உறவினர்களுடன் கோலாகலமாக திருமணம் நடத்தி வைத்த பூசாரியை கைது செய்த போலீசார், மணமக்களின் குடும்பத்திற்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதமும் விதித்தனர். கொரோனா பரவும் சூழலில் நூற்றுக்கணக்கான உறவினர்கள் கலந்துகொண்டு திருமணத்தை நடத்திவைத்திருப்பது அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் தற்போது முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது எனவும், அத்தியாவசிய பொருட்களை வாங்கும் பொருட்டு அருகிலுள்ள கடைகளுக்கு நடந்தே செல்ல வேண்டும் என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு முன்னரே அனுமதி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக 10 நபர்களுக்கு மிகாமல் திருமணம் நடத்த மாநகராட்சி சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை பட்டாளம் பகுதியில் சுமார் 200 நபர்கள் ஒன்றுகூடி கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கோவில் பூசாரி திருமணத்தை நடத்தி வைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து,பூசாரியை கைது செய்த போலீசார், ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடத்திய குற்றத்திற்காக உறவினர்களுக்கு ரூபாய் 20 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, திருமண நிகழ்வில் கலந்துகொண்ட உறவினர்கள் உட்பட அனைவரையும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments