Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாமக்களிடம் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் அரசு பிடுங்கிக் கொள்கிறது - ப.சிதம்பரம்

மக்களிடம் இருக்கும் கொஞ்சம் பணத்தையும் அரசு பிடுங்கிக் கொள்கிறது – ப.சிதம்பரம்

சென்னை

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், 21 நாள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி, ஞாயிறு மட்டும் விடுமுறை தந்து இன்று மண்டும் விலை உயர்த்தப்பட்டுள்ளது என கூறி உள்ளார்.

மக்கள் கைகளில் பணம் இல்லை, இருக்கின்ற கொஞ்சம் பணத்தையும் அரசு பிடுங்கிக் கொள்கிறது. மோடி அரசு ஏழை, நடுத்தர மக்களுக்கு விரோதமான அரசு என்பதற்கு வேறு என்ன ஆதாரம் வேண்டும்? என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments