டெல்லி
ரபேல் விமானங்களை 526 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பதிலாக ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது என்று மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து இந்தியா ரபேல் போர் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.மொத்தமாக 36 விமானங்களை இந்தியா ஆர்டர் செய்த நிலையில் இன்று 5 விமானங்கள் இந்தியா கொண்டு வரப்பட்டது.
இன்று ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான தளத்திற்கு வந்தது. இந்த விமானங்கள் இந்தியா வந்ததை மக்கள் திருவிழா போல கொண்டாடினார்கள். அதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த ரபேல் ஒப்பந்தத்தை தொடக்கத்தில் இருந்தே குற்றஞ்சாட்டி வந்தவர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி. இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துவிட்டதாக அவர், குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் தற்போது ரபேல் விமான கொள்முதல் குறித்து “ரபேல் விமானங்களை 526 கோடி ரூபாய்க்கு வாங்குவதற்கு பதிலாக ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்குகிறது” என்று ராகுல் காந்தி டிவிட் செய்துள்ளார்.