Sunday, January 5, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇலங்கைசர்வதேச நாடுகளின் உதவியுடன் தனி அரசை உருவாக்க வேண்டும் என நினைத்தால் அதற்கும் தயார் -...

சர்வதேச நாடுகளின் உதவியுடன் தனி அரசை உருவாக்க வேண்டும் என நினைத்தால் அதற்கும் தயார் – சிவாஜிலிங்கம்

சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம் என தமிழித் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியைத் தவிர, ஐக்கியம், சமஷ்டி குறித்த பேச்சுக்கு இடமில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறினார்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம் கூறியதாவது:

ஒற்றையாட்சி என்றால் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார். அவ்வாறு சாத்தியம் ஏற்படாத பட்சத்தில் பிரிந்து சென்று தனி அரசை உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் சிந்தனையாக இருந்தால், அதனை நோக்கி பயணிப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒற்றையாட்சி என்றால் புதிய அரசியல் அமைப்பு என்ற ஒன்று தேவையில்லை என்றும் ஏற்கனவே உள்ள அரசியலமைப்புக்களும் தமிழ் மக்களின் சம்மதமின்றி நிறைவேற்றப்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆகவே, இலங்கைக்குள் தீர்வு இல்லையென்றால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments