Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeபொதுமேட்டூர் அணை நீர்மட்டம் 100.78 அடியாக உள்ளது - விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணை நீர்மட்டம் 100.78 அடியாக உள்ளது – விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம்

மேட்டூர் அணை வரலாற்றில், 69-வது முறையாக, அதன் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் 100 அடியை எட்டியது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணைக்கு, தென்மேற்குப் பருவமழை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, நடப்பாண்டில் முதன்முறையாக கடந்த மாதம் 25-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி உயரத்தை எட்டியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 13-ந் தேதி 2-வது முறையாக நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அதன் பின்னர் கடந்த 25ம் தேதி மேட்டூர் அணை 3-வது முறையாக 100 அடியை எட்டி பிடித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. அணைக்கு நேற்று விநாடிக்கு 14 ஆயிரத்து 210 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்தது. இது, மேலும் சரிந்து இன்று காலையில், விநாடிக்கு 11 ஆயிரத்து 258கன அடியாக உயர்ந்தது. தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 100.78 அடியை எட்டியது. இதனால், சேலம், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள், தமிழக மக்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 100 அடி உள்ள நிலையில் டெல்டா பாசனத்திற்காக இன்று காலை விநாடிக்கு 9 ஆயிரம் கன அடி என்ற அளவில் நீர்த்திறக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய்க்கு 800 கன அடி நீர்திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு, இன்று 65.85 டிஎம்சியாக அதிகரித்துக் காணப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments