Sunday, January 5, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க வுக்கு இடம் கிடைக்குமா?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க வுக்கு இடம் கிடைக்குமா?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட நினைப்பதால், கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க வுக்கு இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கணக்குகளை தொடங்கிவிட்டன. தி.மு.க கூட்டணியில் தற்போதைய கட்சிகளே இடம்பெறும் நிலை உள்ளது. முதல்வர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் பெயரை அனைவரும் முன்மொழிந்துள்ளனர். அ.தி.மு.கவை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் பழனிசாமி பெயரை கட்சித் தலைமை முன்னிறுத்தினாலும், கூட்டணியில் உள்ள இதர கட்சிகளின் நிலைப்பாடு பற்றி தெரியவில்லை.

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக,தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் உள்ளன. தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜக, பாமக, தேமுதிகவின் நடவடிக்கைகள் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. கிங் மேக்கராக விஜயகாந்த் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். தமிழக அரசை விமர்சித்து நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை, ட்விட்டர் பதிவு ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தின. அதிமுகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதும், கூட்டணியில் தொடர்வதாக பாமகவினர் அறிவித்தனர்.

அதேபோல, எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தியது, அரசு தடை விதித்த பிறகும் வேல் யாத்திரையை தொடர்வது ஆகியவை அதிமுகவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், கூட்டணி தொடர்வதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பாஜக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

தவிர, அதிமுகவை பொறுத்தவரை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2 தேர்தல்களின்போதும், அதிக தொகுதிகளில் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டையே எடுத்தார். தற்போதும் அதுவே பொருத்தமாக இருக்கும் என்று மூத்த நிர்வாகிகள் கருதுகின்றனர். எனவே, கூட்டணியில் எந்த கட்சியை வைத்துக் கொள்வது என்பது குறித்து இப்போதே தலைவர்கள் சிந்தித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும் சூழலில், அக்கட்சியை பகைத்துக் கொள்வது சரியாக இருக்குமா என்பதையும் அதிமுக வினர் யோசிக்காமல் இல்லை. ஆனால், பாஜக, பாமகவை கூட்டணியில் வைத்துக் கொண்டால், குறைந்தபட்சம் 70 முதல் 80 தொகுதிகளை இழக்க வேண்டி வரும் என கருதுகிறது. அதிலும் குறிப்பாக, அதிமுக வின் கோட்டையான கொங்கு மண்டல தொகுதிகளை பாஜக வுக்கும், வடதமிழகத்தில் அதிக இடங்களை பாமக வுக்கும் அளிக்க வேண்டி வரும். இதன்மூலம், அதிமுகவின் பெரும்பான்மை பலம் குறைந்துவிடும். பாஜக வினரும் அவ்வப்போது “கூட்டணி ஆட்சி” என்று பேசி வருவதற்கு, அதிமுகவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனவே, கூட்டணியில் பாஜக, இடம்பெறுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments