மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து, ராமநாதபுரத்திற்கு 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து, நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.
இதையடுத்து, தென்மேற்கு திசையில் நகர்ந்த அந்த காற்றழுத்த தாழ்வு இராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று அதிகாலைக்குள் கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் தென்மேற்கே நிலை கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவிழக்கும் என கூறப்படுகிறது.
அந்த சூழலில், நாமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து, படிப்படியாக காற்றின் வேகம் குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், புரெவி புயல் வலுவிழந்தாலும், தமிழகம்- புதுச்சேரியில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,
சில இடங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும் எனவும், சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.