வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டத்தில் வன்முறைக்கு வாய்ப்பு உள்ளதா என, மூத்த மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் உள்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
17வது நாளாக அமைதியான முறையில் தொடரும் விவசாயிகள் போராட்டத்தில், வன்முறையை தூண்டும் வகையில் சில சமூக விரோத கும்பல்கள் நுழைந்துள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து, டெல்லி எல்லையில் வன்முறை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அகற்றுவது தொடர்பாக, அமித் ஷா ஆலோசனையில் ஈடுப்பட்டதாகக் கூறப்படுகிறது.