சென்னை
செட்டிநாடு குழும நிறுவனங்களில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.23 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. செட்டிநாடு குழுமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.700 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமாக வெளிநாடுகளில் ரூ.110 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, மும்பையில் சோதனை நடத்தப்பட்டது.