பஞ்சாப் முதலமைச்சரை கொல்பவர்களுக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும் என சுவரொட்டி ஓட்டியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த சுவரொட்டி மொகாலியில் வழிகாட்டி வரைபடத்தில் வைக்கப்பட்டிருந்ததை கண்ட மக்கள், அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் செய்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி மூலம் குற்றவாளிகளை தேடும் பணி விரைவு படுத்தப்பட்டுள்ளதாக மொகாலி நகர காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.