தென்கொரியாவில், 3 குழந்தைகளைப் பெறும் தம்பதிக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
South Gyeongsang மாகாணம் Changwon நகரில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்து வருவதை அடுத்து அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
நகரில் உள்ள அனைத்து திருமணமான தம்பதியினருக்கும் 92ஆயிரம் அமெரிக்க டாலர் கடனாக வழங்கப்படுகிறது. கடன் பெறும் தம்பதியினர் முதல் குழந்தை பெற்றால் கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும் 2-வது குழந்தை பெற்றால் கடன் தொகையில் 30 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் 3-வது குழந்தை பெற்றால் முழு தொகையும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.