அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, அடுத்ததாக விண்வெளிக்கு அனுப்ப உள்ள ராக்கெட்டின் எஞ்சினை இயக்கி சோதனை மேற்கொண்டது.
மிசிசிப்பியில் உள்ள நாசாவின் ஸ்டென்னிஸ் விண்வெளி மையத்தில், இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. நான்கு RS-25 வகை எஞ்சின்கள் 8 நிமிடம் இயக்கி சோதனை செய்யப்பட்டது. அப்போது பல அடி உயரத்திற்கு வெண்புகை எழுந்தது.
2024ல் நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்பு திட்டத்தை முன்னிட்டு, இச்சோதனை முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் ராக்கெட்டின் செயல்பாட்டை சரிபார்க்க நடைபெற்ற ஓராண்டு கால கிரீன் ரன் சோதனை நிறைவு பெற்றது.