Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்Google Pay உள்ளிட்ட செயலிகள் மூலம் ஓட்டுக்கு பண விநியோகம்? தேர்தல் அலுவலருக்கு புகார்

Google Pay உள்ளிட்ட செயலிகள் மூலம் ஓட்டுக்கு பண விநியோகம்? தேர்தல் அலுவலருக்கு புகார்

செயலிகள் மூலம் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவதை தடுக்கக்கோரி தமிழக தேர்தல் அலுவலருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக அமைச்சர்கள் சிலர் பொது மக்களுக்கு Google pay, phonePe, Paytm, amazonpay போன்றவற்றால் ஓட்டுக்கு பணம் விநியோகம் செய்யும் திட்டத்தில் இருப்பதாகவும், அதனைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழக தேர்தல் அலுவலருக்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமசுப்ரமணியம் மனு ஒன்றினை அனுப்பியுள்ளார்.

அவரது மனுவில், ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எஸ்.பி வேலுமணி ஆகியோர் பணபரிவர்த்தனை செயலிகள் மூலமாக பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் விநியோகிக்க திட்டமிட்டு இருப்பதாகவும், தேர்தலுக்கு முந்தைய 4 நாட்களில் பணத்தை விநியோகிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது.

இதனால் தேர்தல் நியாயமான முறையில் நடைபெறுமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆகவே இது போன்ற செயலிகள் மூலமாக பொதுமக்களுக்கு ஓட்டுக்கு பணம் வழங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும். தவறும்பட்சத்தில் இது குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நேரிடும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments