நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வுக்குழு அமைத்த விவகாரத்தில், உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடுத்துள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சட்டமன்றத்தில் ஆதரவாகவும், வெளியே எதிராகவும் பாஜகவினர் நடந்து கொள்கின்றனர். நீட் தேர்வு விசயத்தில் எடுத்துள்ள பாஜகவின் நிலைப்பாடு குறித்து, அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் கருத்து சொல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.