ஜெனீவா
வெவ்வேறு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளை மாற்றிப் போட்டுக் கொள்வது ஆபத்தான போக்காக அமையும், என, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறினார்.
கொரோனா தடுப்பு தொடர்பான, “ஆன்லைன்” கலந்துரையாடலில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பேசியதாவது:
கொரோனா தடுப்பூசியில் முதல் டோஸ் ஒரு நிறுவனத்தின் மருந்தையும், இரண்டாவது டோஸ் மற்றொரு நிறுவனத்தின் மருந்தையும் போட்டுக் கொள்வது ஆபத்தான போக்காக அமையும்.
மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வது என்பதையும் மக்களே தீர்மானிக்க கூடாது. அது பெரும் குழப்பத்தை விளைவிக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.