நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சமதா கட்சியின் ஆர்ப்பாட்டம் திருவொற்றியூர் டோல்கேட் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.
சமதா கட்சியின் மகளிரணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை, வடசென்னை மாவட்ட மகளிரணி தலைவர் சோபியா தலைமை தாங்கினார். மரியசெல்வி, நிஷா மேரி, கேதரின் மேரி மற்றும் ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினர்களாக அகில இந்திய பொதுச்செயலாளர் என்.ஏ.கோன், மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மணிவண்ணன், மாநிலத் துணைத்தலைவர் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். சமதா கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.