இமாசலப்பிரதேசத்தில நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரது உடலும் மீட்கப்பட்டதாக மாநில பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.
இமாசலப் பிரதேச மாநிலம் கின்னெளரில் கடந்த 11-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மற்றும் சில வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
தேசிய பேரிடா் மீட்புப் படை, இந்தோ-திபெத் எல்லை காவல் படை, காவல் துறை மற்றும் ஊா்க்காவல் படையினா் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். முதல் நாளில் 13 போ் உயிருடனும், 10 போ் சடலமாகவும் மீட்கப்பட்டனா்.
கடந்த வாரம் வியாழக்கிழமை 4 சடலங்கள் மீட்கப்பட்டன. வெள்ளிக்கிழமை மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 பேரின் சடலங்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டன.
மேலும், 9 பேரின் சடலங்களை மாநில பேரிடர் மீட்புப் படையினர் தேடி வந்த நிலையில், இன்று அனைவரது உடலும் மீட்கப்பட்டதாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் தேடுதல் பணிகள் திரும்பப் பெறப்பட்டன.