Wednesday, January 15, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஇந்தியாவுக்கு மன்னர் ஒருவரை கொண்டுவர பா.ஜ.க நினைக்கிறது - ராகுல் காந்தி

இந்தியாவுக்கு மன்னர் ஒருவரை கொண்டுவர பா.ஜ.க நினைக்கிறது – ராகுல் காந்தி

லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ராகுல் காந்தி பேசியதாவது:

மேட் இன் இந்தியா குறித்து நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால் மேட் இன் இந்தியா என்பது இனி சாத்தியமற்றது.

மேட் இன் இந்தியா என்பதையே சீர்குலைத்துவிட்டீர்கள். சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ஆதரவு தராமல் மேட் இன் இந்தியா என்பது எப்படி சாத்தியமாகும்? சிறு, குறு தொழில்கள்தான் வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடியவை. மேட் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் என்றெல்லாம் பேசுகிறீர்களே, ஆனால் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை மட்டுமே அதிகரித்து கொண்டே இருக்கிறது. நீங்கள் இரண்டு இந்தியாவை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று பிரித்து வைத்திருக்கிறீர்கள்.

இந்தியாவுக்கு மன்னர் ஒருவரை கொண்டுவர பாஜக நினைக்கிறது. ஆனால் 1947-ம் ஆண்டுடன் அந்த கதை முடிந்துவிட்டது. பாஜகவினர் தங்களது வாழ்நாளில் ஒருபோதும் எப்போதுமே தமிழ்நாட்டு மக்களை ஆட்சி செய்யவே முடியாது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம். மாநிலங்கள் ஒருங்கிணைந்த பேரரசுதான் இந்தியா.

என்னுடைய கொள்ளு தாத்தா 15 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். என்னுடைய பாட்டி 32 முறை துப்பாக்கி குண்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்னுடைய தந்தையார் துண்டு துண்டாக சிதறடிக்கப்பட்டார். ஆகையால் நான் என்ன பேசுகிறேன் என்பது எனக்கும் தெரியும். நீங்கள் இப்போது செய்து கொண்டிருப்பது, கையாளும் விதம் மிக மிக ஆபத்தானது. இதனை நீங்கள் நிறுத்தியாக வேண்டும். நீங்கள் நிறுத்தாமல் போனால் பிரச்சனைகள் உருவாகும். ஏற்கனவே பிரச்சனைகள் வெளிப்பட தொடங்கிவிட்டன.

ஜனாதிபதியின் உரையில் வேலைவாய்ப்பின்மை குறித்து ஒருவார்த்தை கூட சொல்லப்படவில்லை. இந்தியாவின் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை கேட்கின்றனர். உங்களால் வேலைவாய்ப்புகளைத் தர முடியவில்லை. 2021-ம் ஆண்டில் மட்டும் 3 கோடி இளைஞர்கள் வேலைகளை பறிகொடுத்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளி மிகப் பெரிய அளவு வேலைவாய்ப்பின்மை சிக்கல் உருவாகி இருக்கிறது. இந்த நாட்டின் 23 கோடி மக்களை வறுமையில் தள்ளிவிட்டுள்ளீர்கள். இந்தியாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள் என அத்தனையும் ஒருநபருக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டீர்கள். இந்தியா இப்படியே அமைதி காத்து கொண்டிருக்கும் என நினைத்துவிடாதீர்கள். இந்தியாவின் 55 கோடி மக்களிடம் இருக்கும் சொத்துகளை 100 பணக்காரர்களிடம்தான் அதிக சொத்துகள் இருக்கின்றன. உங்களுக்கு இந்தியாவின் வரலாறு தெரியவில்லை.

கேரளாவுக்கு என தனி கலாசாரம் உள்ளது. ராஜஸ்தானுக்கு என ஒரு தனி கலாசாரம் உண்டு. மத்தியில் இருந்து கொண்டு அனைவரையும் ஆட்சி செய்துவிடலாம் என நினைக்காதீர்கள்.. உங்கள் செங்கோல் முறிந்துவிடும். நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்தினது குரலையும் ஒடுக்கி வைத்துள்ளீர்கள். மணிப்பூரை சேர்ந்த குழுவினர் அமித்ஷாவை சந்திக்க செல்லும் போது ஷூக்களை கழற்றிவிட்டு உள்ளே செல்ல சொல்லி இருக்கின்றனர். ஆனால் அமித்ஷாவோ காலணி அணிந்து கொண்டு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். இது மணிப்பூர் மக்களை அவமதிப்பது இல்லையா? இந்த நாட்டின் அடிப்படை கட்டமைப்புடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் பாஜகவும் விளையாடிக் கொண்டிருக்கின்றன. நாங்கள் தேசியவாதிகள். பூடானின் டோக்லாமில் சீனா தளம் அமைத்திருக்கிறது. அது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்கிறோம். ஜம்மு காஷ்மீர் தொடர்பான வெளியுறவுக் கொள்கைகளில் மிகப் பெரிய தவறு செய்துள்ளோம். நான் பேசுவதை நீங்கள் விமர்சிக்கலாம். ஆனால் இந்த தேசத்தை மிகப் பெரும் ஆபத்தில் சிக்க வைத்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments