தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்தால் தாடி வளர்த்து செல்வதும்,தமிழ்நாட்டில் தேர்தல் நடந்தால் லுங்கி அணிந்து செல்வதும் வளர்ச்சியை தருமா?
ஆடைகளை மாற்றி மாற்றி அணிவதால் நாடு வளர்ச்சியடையப் போகிறதா?
மத்தியில் ஆளும் காவி கட்சியை அகற்றி வங்காள விரிகுடாவில் வீச அழைப்பு விடுக்கிறேன். நாட்டுக்கு எது தேவையோ அதை நாம் செய்வோம், அமைதியாக உட்கார மாட்டேன்.
விவசாயிகள், எளிய மக்களை ஏமாற்றிய கோல்மால் பட்ஜெட் ஆக உள்ளது. இது மக்களுக்கு செய்யும் துரோகம்.
இந்த நாட்டிற்கு இவ்வளவு குறுகிய பார்வை உள்ள பிரதமர், இப்படி ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட அரசு இருப்பது வருத்தமாக இருக்கிறது என்றார்.
பாஜக மற்றும் காங்கிரசை தாக்கிய சந்திரசேகர ராவ், இரு தேசியக் கட்சிகளும் நாட்டின் திறனை உணரத் தவறிவிட்டன என்று கூறினார்.