கால்பந்து வரலாற்றில் உலகிலேயே அதிக கோல்கள் அடித்து போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்துள்ளார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக் ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணிக்கு எதிராக ஹாட்ரிக் கோலடித்த ரொனால்டோ கால்பந்து வரலாற்றில் மொத்தமாக இதுவரை 807 கோல்கள் அடித்துள்ளார்.
இதற்கு முன்பு ஆஸ்திரேலிய – செக் குடியரசு வீரர் ஜோசப் பிகான் 805 கோல்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்து வந்துள்ளது. தற்போது அந்த சாதனையை ரொனால்டோ முறியடித்துள்ளார்.