90 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டஸ்மானியன் புலி இனத்தை, ஜீன் எடிட்டிங் மற்றும் ஸ்டெம் செல் தொழில்நுட்பம் மூலம் மீட்க அமெரிக்க, ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. டஸ்மானியன் புலியின் முறைப்படியான பெயர் ‘தைலசைன்’ என்பதாகும். இந்த இனத்தில் மிச்சம் இருந்த கடைசி விலங்கு 1930களில் இறந்துபோனது.