ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் கரன்சிக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1ம் தேதி முதல் இந்த தடை அமல்படுத்தப்படுள்ளதாக தலிபான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் கரன்சி தடைக்கான காரணத்தை ஆப்கானிஸ்தான் அரசு வெளியிடவில்லை. இந்நிலையில், இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது குறித்த செய்தியை ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனமான காமா பிரஸ் வெளியிட்டுள்ளது.