சிட்னி
தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல் அளித்துள்ளது. தங்களையும் தாக்க முகமது முயற்சித்ததால் அவரை துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.