ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் பல தளங்களை கொண்ட அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. மாத வாடகை 2.44 கோடி ரூபாய்.
பிரபல ஆப்பிள் நிறுவனம் பெங்களூருவில் உள்ள பிரிஸ்டீஜ் எஸ்டேட்ஸ் நிறுவனத்தினால் கட்டப்பட்ட அலுவலக கட்டடத்தில் பல தளங்களை 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இதற்கான மாத வாடகை 2.44 கோடி ரூபாய் என்றும் தெரியவந்துள்ளது.