Monday, May 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்கோவிட்-19 மாதிரி பயிற்சிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கோவிட்-19 மாதிரி பயிற்சிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள கோவிட்-19 வளாகத்தில் தயார் நிலையில் உள்ள கொரோனா சிகிச்சை வார்டுகள் மற்றும் படுக்கைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டும், மாதிரி பயிற்சிகளை ஆய்வு செய்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பணியாளர் ஒருவரை ஆம்புலன்ஸில் இருந்து அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படும் முறைகள் ஒத்திகையாக அமைச்சர் முன்பு செய்து காட்டப்பட்டது.

இதில், கொரோனா சிகிச்சை ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பது குறிப்பிடப்படும், ஆக்சிஜன் வசதிகள், ஐ.சி.யூ படுக்கைகள் ,போதிய அளவு மருந்து கையிருப்பு உள்ளிட்டவை தயார் நிலையில் இருப்பத குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார் ,பொது சுகாதாரத் துறையின் இயக்குனர் செல்வ விநாயகம், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் ஆகியோர் இருந்தனர்.

ஆய்விற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:

கொரோனா தொற்று முன்னேற்பாடு மாதிரி பயிற்சி தமிழகத்தில் உள்ள மொத்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், உள்பட அனைத்து மருத்துவ கட்டமைப்பிலும் இன்று தொடங்குகிறது.

2 நாட்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் மாதிரி பயிற்சியில் ஈடுபடுவர்.

தமிழ்நாட்டில் 369 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறைந்த சதவீதத்திலேயே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலில் உள்ளனர்.

ஒமிக்ரானின் உருமாற்றமான வைரஸ் பாதிப்பு இந்தியா முழுவதும் பரவுகிறது.

வெண்டிலேட்டர், மருத்துவ பணியாளர்கள், மருந்து கையிருப்பு, பாதுகாப்பு கவச உடை உள்பட பல்வேறு விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில்கொரோனாவிற்கு முன்னெச்சரிக்கையாக 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. 33,664 ஆக்சிஜன் படுக்கைகளும், 22,820 சாதாரண படுக்கைகளும், 7,797 ஐசியு படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது.

24,500 ஆக்சி காண்சன்ட்ரேட்டர்களும், 260 பிஎஸ்ஏ ஆக்சிஜன் பிளான்ட்களும், 130 ஆக்சிஜன் சேமிப்பு கலன்களும், 2,067 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது

ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய அரசு, தனியார் என சேர்த்து 342 இடங்களில் உள்ளது.

நாள்தோறும் 11,000 பேர் வரை ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நாள்தோறும் 500 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யும் வசதி உள்ளது.

இன்புளுயன்சா காய்ச்சலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு முகாம் அமைக்க அறிவுறுத்தினார்.

1,586 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டது. 11,159 பேருக்குபாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அனைவருக்கும் குணப்படுத்தவும்பட்டது.

இன்ஃபுளுயன்சா தொற்று இல்லாத நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. இன்று முதல் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு இன்ஃபுளுயென்சா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

மற்ற மாநிலங்களுக்கு முன்னதாக கட்டுப்பாடுகளை முதலில் விதித்தது தமிழகத்தில்தான். பாதிப்புகள் அதிகமாகும்
போது கட்டுப்பாடுகள் கூடுதலாக விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும். கொரோனா இந்த பாதிப்பு என்பது அதிகமாக இல்லை. கூடுதலாக பரவும் நிலை இருந்தால், பொது இடங்களில் கட்டுப்பாடு விதிக்கப்படும் சூழல் ஏற்படும். குறைவான அளவிலே பாதிப்பு இருப்பதால் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டிய நிலை தற்போது இல்லை என்றார்.

- Advertisment -

Most Popular

Recent Comments