Friday, December 27, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாதேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும் - பாகிஸ்தானுக்கு ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

தேவைப்பட்டால் எல்லை கோட்டை இந்திய ராணுவம் தாண்டும் – பாகிஸ்தானுக்கு ராஜ்நாத்சிங் எச்சரிக்கை

லடாக்

தேவைப்படுகிற சூழ்நிலையில் இந்திய ராணுவமானது எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டும் என பாகிஸ்தானுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கார்கில் யுத்தத்தின் 24-வது வெற்றி தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. கார்கில் போரில் இன்னுயிர் நீத்த தேசத்தின் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்றன. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கார்கில் வீரர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தி உள்ளனர்.

லடாக்கின் திராஸ் போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்பு படை தளபதிகள் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர். திராஸ் போர் நினைவிடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: கார்கில் யுத்தம் இந்தியா மீது திணிக்கப்பட்டது. இந்தியா அப்போது பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண முயற்சித்துக் கொண்டிருந்தது. கார்கில் யுத்தத்தில் ஆபரேஷன் விஜய் மூலம் பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்திய ராணுவம் வலிமையான ஒரு செய்தியை சொல்லி இருந்தது. இந்தியாவின் நலன்களுக்கு ஆபத்து எனில் இந்திய ராணுவம் எந்த விலை கொடுத்தேனும் அதனை முறியடிக்கும், ஒரு போதும் பின்வாங்காது என்பதுதான் அந்த செய்தி.

கார்கில் யுத்தம் என்பது இரு ராணுவங்களுக்கு இடையேயானது மட்டுமல்ல.. இரு தேசங்களுக்கு, இரண்டு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்தது. கார்கில் யுத்தம் 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி முடிவடைந்தது. அதன்பின்னர், கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்ற நிலையில் நமது ராணுவம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிச் செல்லவில்லை.

இந்தியா அமைதியை விரும்புகிறது. இந்தியா அமைதியை விரும்புவதால்தான் கார்கில் யுத்தத்தில் வென்ற போதும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை நமது ராணுவம் தாண்டி செலல்வில்லை. நாம் ச்ர்வதேச சட்டங்களை மதிப்பவர்கள். எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அன்று தாண்டி செல்லவில்லை என்பதால் நம்மால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்ட முடியாது என்பது அர்த்தம் அல்ல. நாம் எல்லை கட்டுப்பாட்டை தாண்டுவோம். நம்மால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டவும் முடியும். எதிர்காலத்தில் அப்படியான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டால் நாம் நிச்சயம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டுவோம் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு உறுதியாக தெரிவித்து கொள்கிறேன் என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

- Advertisment -

Most Popular

Recent Comments