மணிப்பூரில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, இம்பால் மேற்கு மாவட்டத்தில் பன்றிகளை கொண்டு செல்லவும், பன்றி இறைச்சியை விற்பனை செய்யவும் மணிப்பூர் அரசு தடைவிதித்துள்ளது.
இதுவரை சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள ஏராளமான பன்றிகள் இறந்துள்ள நிலையில், பன்றி இறைச்சி வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பன்றி பண்ணையாளர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது.