Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாசர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் – கெஜ்ரிவால்

சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி திகார் சிறையில் இருந்து நேற்று இரவு வெளியே வந்த முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான ஆம்ஆத்மி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் பேசியதாவது:

சர்வாதிகாரத்தில் இருந்து நாட்டை காப்பாற்ற நான் முழு வலிமையுடன் போராடுகிறேன். 140 கோடி மக்களும் இணைந்து சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவோம். முதலில் அனுமனை தரிசனம் செய்ய விரும்புகிறேன். அனுமனின் ஆசீர்வாதத்தால் நான் உங்கள் மத்தியில் இருக்கிறேன். நான் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் எனக்கு தங்கள் ஆசீர்வாதங்களை அனுப்பியுள்ளனர். அதனால் நான் இங்கு இருக்கிறேன். உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.

- Advertisment -

Most Popular

Recent Comments