கோவையில் அக்டோபர் 25ம் தேதி இரவு பெய்த கனமழையால், செல்வபுரம் செல்வசிந்தாமணி குளம் எதிரே உள்ள அசோக் நகரில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதையடுத்து, தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணிகள் அதிகாலை 4 மணி முதலே தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இப்பணிகளில் 100-க்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்களும், 10-க்கும் மேற்பட்ட நீர் உறிஞ்சும் வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.



