Tuesday, December 1, 2020
Home வர்த்தகம் சென்னையில் இன்றைய பெட்ரோல் - டீசல் விலை நிலவரம்

சென்னையில் இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்

சென்னை,

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 28வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் 18 வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது.

சென்னையில் 28 ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், 18 வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

டெல்லியில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகளின் பசியினை போக்க உணவு தயாரிக்கும் பெண்கள்

டெல்லி டெல்லியில் போராட்டம் நடத்தும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்காக உணவு தயாரிப்பில் பெண்கள் பல குழுக்களாக ஈடுபட்டுள்ளனர். உணவு பிரச்சினையால் போராட்டம் எந்த அளவிலும் வலுவிழந்து விடக்கூடாது என்பதால் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளின் குடும்பத்து பெண்கள் தங்கள்...

மத்திய பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சி – டெல்லியில் கடும் குளிரில் 5வது நாளாக விவசாயிகள் போராட்டம்

டெல்லி மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் கிளர்ச்சி டெல்லியில் 5-வது நாளாக இன்றும் தொடருகிறது. மத்திய பாஜக அரசு அண்மையில் 3 புதிய விவசாய சட்டங்களை கொண்டு வந்தது....

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன் இன்று மாலை டிஸ்சார்ஜ்

விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பேரறிவாளன் இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால்...

அரசியல் பிரவேசம் பற்றி விரைவில் முடிவை அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

தனது அரசியல் பிரவேசம் பற்றிய முடிவை விரைவில் அறிவிக்க உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவுற்ற பிறகு போயஸ் கார்டன் பகுதியிலுள்ள தனது...

Recent Comments